ஜப்பானில் தங்க பதக்கத்தை வசப்படுத்திய இந்திய வீரர் | Japan | sumit antil

Update: 2024-05-22 07:16 GMT

ஜப்பானில் நடைபெற்றுவரும் பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய ஈட்டியெறிதல் வீரர் சுமித் அன்டில் (SUMIT ANTIL) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆடவர் F-64 பிரிவில் களமிறங்கிய சுமித் அன்டில் அதிகபட்சமாக 69 புள்ளி 50 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியெறிந்தார். இதன்மூலம் முதலிடம் பிடித்த அவர், தங்கப் பதக்கத்தையும் வசப்படுத்தினார். கடந்த ஆண்டு நடைபெற்ற பாரா ஈட்டியெறிதல் போட்டியிலும் சுமித் அன்டில் தங்கம் வென்றது நினைவுகூரத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்