ஐரோப்பாவின் புகழ்பெற்ற இசை நிகழ்ச்சி - 'யூரோவிஷன் 2024'... இறுதி சுற்றுக்கு தேர்வான இஸ்ரேல் பாடகர்

Update: 2024-05-10 17:04 GMT

பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்களுக்கு இடையே ஸ்வீடனில் நடைபெற்று வரும் ஐரோப்பாவின் புகழ்பெற்ற இசை நிகழ்ச்சியான 'யூரோவிஷனின்' இறுதிப்போட்டிக்கு இஸ்ரேல் பாடகர் தேர்வாகியுள்ளார். இதனால் போட்டி நடைபெறும் இடத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியில் 37 நாடுகளைச் சேர்ந்த பாடகர்கள் தங்களது சொந்த பாடல்களை பாடி திறமையை வெளிப்படுத்தி வந்த நிலையில், இறுதிப்போட்டிக்கு 26 நாடுகள் தேர்வாகியுள்ளனர். ஆன்லைன் வாக்கெடுப்பின் மூலம் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு மிகவும் பிடித்தமான சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்