டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்கின் இந்திய பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது

Update: 2024-04-20 11:33 GMT

இம்மாதம் 21 மற்றும் 22ம் தேதிகளில் எலான் மஸ்க் இந்தியா வர இருந்தார். இந்த பயணத்தின் போது, டெஸ்லா நிறுவனம் 2 பில்லியன் டாலர் அளவிற்கு, இந்தியாவில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், எலான் மஸ்க்கின் இந்திய வருகை தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில், "துரதிர்ஷ்டவசமாக, டெஸ்லா நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான எனது இந்திய பயணம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது... இருப்பினும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்திய பயணத்தை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்