நிலநடுக்கத்தால் குலுங்கிய பூமி... மூளையை திறந்து நடந்த ஆபரேஷன் - திக்..திக் நொடிகள்- வைரல் வீடியோ

Update: 2024-01-25 16:20 GMT

வடமேற்கு சீனாவின் சின்ஜியாங் உய்குர் பகுதியில் கடந்த செவ்வாயன்று 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போதும் மருத்துவர்கள் நோயாளிக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட வீடியோ வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... நிலநடுக்கத்தால் சின்ஜியாங்கில் ஏரல் மருத்துவமனையின் கட்டடம் குலுங்கிய போதும், அச்சப்படாமல் நிதானமாகவும் கவனமாகவும் மருத்துவர்கள் நோயாளிக்கு மூளை அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்... வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நிறைவடைந்து நோயாளியும் காப்பாற்றப்பட்டார்...

Tags:    

மேலும் செய்திகள்