- ஐஸ்லாந்து நாட்டுக்கு குளு குளு பயணம்...
- ஊர் சுற்ற கிளம்பலாம் வாங்க...
- என்டர்டெயின்மென்ட் நிறைந்த IceLand...
- ஊர் சுற்றி பார்க்க வேறலெவல் ஸ்பாட்...
- சிலுசிலு காத்து... சாரல் மழை... மண்வாசம்... இதெல்லாம் வர்ஷத்துல என்னைக்காவது ஒருநாள் கிடைச்சாலே நம்மாளுங்கல கையிலயே புடிக்க முடியாது.
- இப்டி, ஸ்டேடஸ் போட்டு ஏக்கத்த தணிக்கிறவங்கள கொண்டு போய் வர்ஷம் புல்லா குளுகுளுனு இருக்குற நாட்டுக்கு கூட்டிட்டு போனா அங்க என்ன பண்ணுவாங்கன்னு சொல்லவா வேணும் ?
- இந்த winter - க்கு நாம chill பண்ண வந்துருக்கிற இடம் Iceland.
- ஐஸ்லாண்டுக்கு பேரு வைக்கிறதுக்காக இவங்க ரொம்பலாம் யோசிக்களைங்க...
- வருஷம் முழுக்க பனியும், குளிரும் அதிகமா இருக்குறதால இந்த Land-க்கு, Iceland- தான் பொருத்தமான பெயர்ரா இருக்கும்னு தான் அதையே வச்சிருக்காங்க.
- கோபம் இருக்குற இடத்துல நல்ல குணமும் இருக்கும்னு சொல்ற மாதிரி... கடும் குளிர் இருக்குற இதே நாட்டுல தான், நெருப்ப கக்குற எரிமலைகளும் அதிகளவு இருக்குறதா அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க...
- அட, என்னப்பா இது எந்த பக்கம் திரும்பினாலும் லியோ படத்துல வர்ற மாதிரி வெள்ளவெள்ளைன்னு பனி பிரதேசமா இருக்கு, இங்க ஐஸ்-அ தவிர சுத்திப்பார்க்க ஒன்னுமே இல்லையான்னு நீங்க மனசுக்குள்ள நினைச்சது இங்க எனக்கும் கேட்ருச்சி... ஒரு உண்மை சொல்லனும்னா "என்ன வளம் இல்லை இந்த ஐஸ்லாண்டில்" கேட்குற அளவுக்கு இங்க சுற்றிப்பார்க்காவும், நம்மள ஆச்சரியத்துல உரைய வைக்கவும் எக்கச்சக்கமான ஸ்பாட்ஸ் இருக்கு...
- நாட்டுக்குள்ள நுழைஞ்சதுமே சுற்றுவாசிகள் கூட்டம்கூட்டமா படையெடுக்குறது எங்க தெரியுமா ?.
- அது இந்த Grindavik Blue Lagoon -க்கு தான். நீராவி பறக்க ஆனந்த குளியல்போடுறதுக்கு இதவிட செம்ம ஸ்பாட் இந்த உலகத்துலயே இல்லை...