அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் துப்பாக்கி கலாச்சாரம்... அடுத்தடுத்து அரங்கேறிய பயங்கரம்!

பிட்ஸ்பர்க் நகரில் உள்ள Allegheny பகுதியில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியின்போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 2 பேர் உயிரிழந்தனர்.;

Update: 2022-04-18 02:28 GMT
அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் துப்பாக்கி கலாச்சாரம்... அடுத்தடுத்து அரங்கேறிய பயங்கரம்!

பிட்ஸ்பர்க் நகரில் உள்ள Allegheny பகுதியில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியின்போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 2 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இதுகுறித்து அங்கு விசாரணை மேற்கொண்டனர். அதில், விருந்து நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 200 பேர் கூடியிருந்த நிலையில், துப்பாக்கியால் 50க்கும் மேற்பட்ட முறை சுடப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல், தெற்கு கரோலினாவில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 12 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்