இயல்பு நிலைக்கு திரும்பும் கஜகஸ்தான்...பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் ரஷ்ய வீர‌ர்கள்

வன்முறையால் பாதிக்கப்பட்ட கஜகஸ்தான் நாட்டில் இயல்புநிலை திரும்பி வருகிறது

Update: 2022-01-12 09:18 GMT
கஜகஸ்தானில் எரிபொருள் விலையை அரசு உயர்த்தியதை கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. ஒருகட்டத்தில் போராட்டம், மிகப்பெரிய வன்முறையாக மாறியதால், கஜகஸ்தான் பிரதமர் ராஜினாமா செய்தார். மேலும், வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக ஜனவரி 19-ந்தேதி வரை நாடு தழுவிய அவசரநிலை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ரஷ்ய ராணுவனத்தின் அமைதிப்படை கஜகஸ்தானில் களம் இறக்கப்பட்டது. தற்போது சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீர‌ர்கள் கஜகஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய தொழிற்சாலைகள் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால் கஜகஸ்தானில் அமைதி நிலை திரும்பியுள்ளது. இதையடுத்து ரஷ்ய அமைதிப்படை வீர‌ர்கள் அடுத்த 2 நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என ஜோமார்ட்(Jomart) தெரிவித்துள்ளார்.   

Tags:    

மேலும் செய்திகள்