அட்லாண்டிக் கடலில் ஆபத்தான பயணம் - புலம்பெயர்ந்தோரை மீட்ட ஸ்பெயின் அதிகாரிகள்

அட்லாண்டிக் கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட 36 புலம்பெயர்ந்தோரை ஸ்பெயின் கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.

Update: 2021-10-11 07:37 GMT
அட்லாண்டிக் கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட 36 புலம்பெயர்ந்தோரை ஸ்பெயின் கடற்படையினர் பத்திரமாக மீட்டனர். அவர்கள் க்ரான் கேனரி தீவுப்பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 36 பேரை அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஆப்பிரிக்க பகுதிகளில் இருந்து அட்லாண்டிக் கடலில் அபாயமிக்க பயணம் மேற்கொண்டு மக்கள் புலம்பெயருவது சமீக ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் 30க்குள்ளாகவே கிட்டத்தட்ட 13 ஆயிரத்து 100க்கும் அதிகமானோர் புலம்பெயர்ந்தோராக கெனரி தீவுகளுக்கு வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்