23வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள் - உலகின் நம்பர் ஒன் தேடுதல் எந்திரம்

உலகின் மிகப் பெரிய தேடுதல் எந்திரமான கூகுள் நிறுவனம், தனது 23ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது.

Update: 2021-09-27 13:51 GMT
உலகப் புகழ்பெற்ற, அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில், லாரி பேஜ் மற்றும் செர்கே பிரின் ஆகிய இருவரும் மாணவர்களாக இருந்த போது, 1998 செப்டம்பரில் கூகுள் நிறுவனத்தை சிறிய அளவில், ஒரு கார் நிறுத்தும் இடத்தில் தொடங்கினர். இணையத்தில் தகவல்களை தேட அதுவரை பயன்படுத்தப்பட்ட முறைகளுக்கு பதிலாக, புதிய முறை ஒன்றை உருவாக்கி, அதன் அடிப்படிடையில் கூகுள் தேடுதல் எந்திரத்தை வடிவமைத்தனர். கூகுள் பின்னர் படிப்படியாக வளர்ந்து உலகின் நம்பர் ஒன் தேடுதல் எந்திரமாக உருவெடுத்தது. 2005இல் ஆன்ட்ராய்ட் செயலியை 370 கோடி ரூபாய்க்கும், 2006இல் யூடியூப் நிறுவனத்தை 12,180 கோடி ரூபாய்க்கும் வாங்கியது. தற்போது கூகுள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 140 லட்சம் கோடி ரூபாயாக, உலகின் மூன்றாவது பெரிய நிறுவனமாக உள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, சென்னையில் பிறந்த தமிழரான சுந்தர் பிச்சை, 2015 முதல் பதவி வகிக்கிறார். கூகுள் தேடுதல் எந்திரத்தை ஒவ்வொரு விநாடியிலும், உலகெங்கும் 70,000 பேர் பயன்படுத்துகின்றனர். கூகுள் நிறுவனத்தின் 23ஆம பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அதன் தேடுதள முகப்பில் ஒரு புதுமையான டூடுள் உருவாக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்