ஆப்கானில் மந்தமான வியாபாரம் - வியாபாரிகள் கவலை

நாட்டில் அமைதி நிலவி, கடைகள் திறக்கப்பட்டாலும் தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றியதில் இருந்து தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Update: 2021-09-04 07:02 GMT
நாட்டில் அமைதி நிலவி, கடைகள் திறக்கப்பட்டாலும் தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றியதில் இருந்து தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தலிபான்களின் வருகைக்கு முன்பாக பலர் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருவார்கள் என்றும், ஆனால் தற்போது வியாபாரம் மந்தமாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் அமெரிக்கா நாட்டிற்குள் நுழைந்ததில் இருந்து, சில கட்டடங்கள் கட்டியதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை என்றும், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது. பணி நியமனங்களின் போது கடந்த ஆட்சியில் ஊழல் அதிகரித்ததால், பல படித்த இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு செல்ல நினைப்பதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்