அமெரிக்க நாடாளுமன்றம் மீது தாக்குதல் - டிரம்ப் ஆதரவாளர்களால் வெடித்த வன்முறை

அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதலில் வன்முறையை தூண்டிய நபருக்கு 8 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-20 08:56 GMT
அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதலில் வன்முறையை தூண்டிய நபருக்கு 8 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்ததால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள்,  நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டோல் கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் வன்முறை வெடித்தது. இந்த கலவரம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டதாக 535பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பால் ஹாட்கின்ஸ் என்பவர் வன்முறை ஏற்பட காரணமாக இருந்ததால் அவருக்கு 8 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

Tags:    

மேலும் செய்திகள்