வானில் பறக்க உதவும் ஜெட் சூட் - மணிக்கு 128 கி.மீ. வேகத்தில் பறக்கலாம்

மின்சாரத்தில் இயங்கும் ஜெட்சூட் மூலம் மனிதனை அயர்ன் மேனை போல பறக்க வகை செய்துள்ள கண்டுபிடிப்பு பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்

Update: 2021-07-15 10:37 GMT
மின்சாரத்தில் இயங்கும் ஜெட்சூட் மூலம் மனிதனை அயர்ன் மேனை போல பறக்க வகை செய்துள்ள கண்டுபிடிப்பு பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்

உடம்பில் கவச உடையை பொறுத்தி கொண்டு விண்ணில் சீறிப்பாயும் அயர்ன் மேன் பட நாயகனுக்கென உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதே போல் நிஜத்திலும் பறக்க வைக்கும் ஒரு அதிநவீன ஜெட்சூட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பிரட்டனின் கிராவிட்டி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மனிதர்களை விண்ணில் பறக்க செய்யும் ஜெட் சூட் ஒன்றை உருவாக்கியுள்ளது.

முன்பு ஜெட் எரிபொருள் மூலம் இயங்கிய இந்த கருவி, தற்போது மின்சாரத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

BREATH.. 

பிரட்டனின் மேற்கு சசெக்ஸ் மாவட்டத்தின் குட்வுட் பகுதியில் இந்த ஜெட் சூட் கருவியை அணிந்த ஒருவர், வானில் பறந்து பத்திரமாக தரையிறங்கியது, பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பேட்டரியில் இயங்கும் இந்த ஜெட் சூட் மூலம் மணிக்கு 128 கிலோ மீட்டர் வேகத்தில், 12,000 அடி
உயரத்தில் பறக்க முடியும் என்றாலும், தற்போது குறைந்த உயரத்தில் மிதமான வேகத்தில் பறந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு தெருவில் உள்ள வீடுகளுக்கு தேவைப்படும் மின்சாரத்தின் மொத்த அளவிற்கு இணையாக இந்த ஜெட் சூட்டிற்கு தேவைபடுகிறது என்று இதை உருவாக்கிய கிராவிட்டி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரவ்னிங் (Richard Browning)கூறுகிறார்.

ராணுவ நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் மீட்பு பணிகளில் இதை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்