ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த பிரான்ஸ் - வெளிநாடு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது அந்நாட்டு அரசு. இதுபற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

Update: 2021-06-09 04:43 GMT
பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது அந்நாட்டு அரசு. இதுபற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

பிரான்ஸில் முழு ஊரடங்கால் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டதால், பொது இடங்களை உடற்பயிற்சி கூடங்கள் போன்று செட்டப் செய்து பயிற்சி செய்துவந்தவர்கள் ஏராளம். 

தற்போது இவர்களுக்கு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது பிரான்ஸ் அரசு

கொரோனா பரவல் குறைந்து வருவதால் உடற்பயிற்சி கூடங்களை திறக்கலாம் என பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 472ஆக குறைந்துள்ளதோடு, சுமார் 7 கோடி மக்கள் தொகையில் 60 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகை உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்களை திறக்க பிரான்ஸ் அரசு அனுமதித்துள்ளது. இதனால் மக்களை வரவேற்க உடற்பயிற்சி கூடங்கள் தயாராகிவிட்டன.

Tags:    

மேலும் செய்திகள்