இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் - உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்

கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி தவிக்கும் இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

Update: 2021-04-26 08:51 GMT
கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி தவிக்கும் இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

கொரோனா முதல் அலையை கட்டுப்படுத்திய இந்தியா, உலக நாடுகளுக்கு சிகிச்சை மருந்துகளையும், உபகரணங்களையும், தடுப்பூசிகளையும் வழங்கி உதவியது. ஆனால் தற்போது  கொரோனா 2-வது அலையில் நாட்டில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி செல்கிறது. பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் மருந்துகளுக்கும், ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மோசமாகி வரும் நிலையில், உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்களை அனுப்பியுள்ளன. இதுபோன்று ஐரோப்பிய யூனியன், ரஷ்யா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா, சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், பாகிஸ்தான், பூடான் உள்ளிட்ட நாடுகளும் உதவ முன்வந்துள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்