ஆங் சான் சூகியின் தடுப்புக்காவல் நீட்டிப்பு - ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தீவிரம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடையும் நிலையில் 2 ஆவது நாளாக இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

Update: 2021-02-16 07:11 GMT
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம்  தீவிரமடையும் நிலையில் 2 ஆவது நாளாக இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

மியான்மர் தலைவர் ஆங் சான் சூகியின் தடுப்புக்காவல் காலத்தை மியான்மர் ராணுவம் மேலும் நீட்டித்துள்ளது. சூகியின் தடுப்புக்காவல் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அவர் மேலும் பல நாட்களுக்கு தடுப்புக்காவலில் இருப்பார் என ராணுவம் அறிவித்து இருக்கிறது. இதற்கிடையே சூகியை உடனடியாக விடுவிக்க கோரியும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். சூகி கட்சி அலுவலகம் முன்பாக திரண்ட மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்றும் நிலையில் நேபிடாவ், யாங்கூன் உள்ளிட்ட நகரங்களில் ஆயுதமேந்திய ராணுவ வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் அங்கு இணைய சேவை இரண்டாவது நாளாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே காச்சின் மாநிலத்தில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தும் வீடியோவும் வெளியாகியிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்