"பதவி ஏற்பில் கலந்து கொள்ள மாட்டேன் என்ற டிரம்ப் அறிவிப்புக்கு பைடன் வரவேற்பு"

பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ள மாட்டேன் என டிரம்ப் அறிவித்ததை நல்லது எனக் கூறி ஜோ பைடன் ஏற்றுக்கொண்டார்.

Update: 2021-01-09 06:38 GMT
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் வரும் 20 ஆம் தேதி பதவி ஏற்கிறார். அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற அவருக்கு நாடாளுமன்றத்தில் சான்றிதழ் வழங்கப்பட்ட  போது டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதற்கு பைடன் கடும் கண்டனத்தை அடுத்து அதிபராக இருக்கும் டொனால்டு டிரம்ப், 20ஆம் தேதி நடைபெற இருக்கும் பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்ளப்போது கிடையாது எனக் அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பை பைடன் வரவேற்று உள்ளார்.  வில்மிங்டன்னில் பைடன் பேசுகையில், இது நல்ல காரியம் என்றும் டிரம்பும் நானும் ஒப்புக்கொண்ட சில விஷயங்களில் இதுவும் ஒன்று என்றும் கூறியுள்ளார். மேலும் டிரம்பால் நாட்டுக்குதான் அவமானம் என காட்டமாக கூறியிருக்கும் பைடன், டிரம்பை பதவி நீக்கம் செய்வது குறித்து நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறினார் 
Tags:    

மேலும் செய்திகள்