அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி - ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்;

Update: 2020-11-18 05:45 GMT
இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.  இந்தியா -அமெரிக்கா இருதரப்பு உறவில்
உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, கொரோனா தொற்று, பருவநிலை மாற்றம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு போன்ற விவகாரங்களில் இருதரப்பு முன்னுரிமை மற்றும் கவலைகள் குறித்து விவாதித்ததாக தெரிவித்து உள்ளார். மேலும், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிசுக்கும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அவருடைய வெற்றி இந்தியா-அமெரிக்கா உறவை வலுவாக்கும் பாலமாகவும்
இந்திய வம்சாவளி உறுப்பினர்களுக்கு மிகுந்த பெருமையையும் உத்வேகத்தையும் அளிக்கும்
எனவும் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்