போர்க்குற்றச்சாட்டுகள் கொண்டவர்களுக்கு உயர்பதவி - ஐ.நா கருத்தை புறந்தள்ளி அடாவடி காட்டும் இலங்கை

இலங்கை அரசு போர்க்குற்றச்சாட்டுகளை கொண்ட ராணுவ அதிகாரிகளுக்கு உயர் பதவிகளை கொடுத்து, ஐ.நா மனித உரிமை பேரவையின் விமர்சனத்தை புறந்தள்ளியுள்ளது.

Update: 2020-09-18 04:11 GMT
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில், போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாகவும், கேர்ணல் பிரியங்கர பெர்ணான்டோ இராணுவத்தின் சொத்துக்களுக்குப் பொறுப்பானவரும் அதேபோல 58ஆவது அணியின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தம் குறித்து பொய்யான கருத்துகள் வெளியிடப்பட்டு வருவதாக கூறினார். அந்த குற்றச்சாட்டுகளுக்கு அடிபணிந்து போக முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த அவர், இவ்வாறான பதவி உயர்வு கொடுப்பதில் தவறில்லை என்றும் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்