2036 - வரை ரஷ்யாவின் நிரந்தர அதிபராகிறார் விளாடிமிர் புதின் அரசியலமைப்பு சட்ட திருத்ததிற்கு 76% பேர் ஆதரவு

ரஷ்ய அதிபர் புதின் அதிபராக நீடிக்கும் அரசியலமைப்பு சட்டத்திற்கு, 76 சதவிகிதத்தினர், ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Update: 2020-07-02 11:56 GMT
ரஷ்ய அதிபர் புதின் அதிபராக நீடிக்கும் அரசியலமைப்பு சட்டத்திற்கு, 76 சதவிகிதத்தினர், ஆதரவு தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில், 2036 ஆம் ஆண்டு வரை, அதிபராக நீடிக்கும் வகையிலான அரசியலமைப்பு சட்டத்தில் புதின் திருத்தம் கொண்டு வந்தார். இதன் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்,  76 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக, அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 24 சதவிகிதம் பேர், மட்டும் இந்த திருத்தத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்துள்ளதாகவும், மத்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் அதிபர் புதின், 2036 ஆம் ஆண்டு வரை ரஷ்யாவை ஆட்சி செய்ய வாய்ப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்