வரும் 1ஆம் தேதி முதல் அருங்காட்சியகங்கள் திறப்பு - ஆன்லைன் மூலமாக டிக்கெட்கள் விற்பனை
இத்தாலி நாட்டின் வாடிகன் நகரில் உள்ள அருங்காட்சியங்கள் வரும் ஜுன் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
இத்தாலி நாட்டின் , வாடிகன் நகரில் உள்ள அருங்காட்சியங்கள் வரும் ஜுன் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்க்க குறைவான பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அருங்காட்சியத்தை சுற்றி பார்க்க வரும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி அருங்காட்சியங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது