மே 18 தாக்குதலை கண்டிக்கும் பிரான்ஸ் பேரணி: "பேரணியில் பங்கேற்க முடியாதது வருத்தம் அளிக்கிறது" - பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் லாக்கரடே கருத்து

இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலைக் கண்டித்து ஆண்டு தோறும் மே18 ஆம் தேதி இலங்கை அரசை கண்டித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பிரான்சில் பிரமாண்ட பேரணி நடைபெறுவது வழக்கம்.

Update: 2020-05-18 03:12 GMT
இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலைக் கண்டித்து ஆண்டு தோறும் மே18 ஆம் தேதி இலங்கை அரசை கண்டித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பிரான்சில் பிரமாண்ட பேரணி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக விலகல் நடைமுறையில் உள்ளது. இதனால் மே 18 ஆம் தேதி நடைபெற இருந்த பேரணியில் பங்கேற்க முடியவில்லை என பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் ஆய்வுக் குழுவின் துணைத் தலைவருமான M.Jean-Christophe LAGARDE வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், மே 18 நிகழ்வில் போர் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் நினைவு படுத்தி , எடுத்துக் கூற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்