இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 705 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது.;

Update: 2020-05-03 10:04 GMT
இது வரை 172 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். 526 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேருக்கு, இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இலங்கையில் சில பகுதிகளில் இதுவரை 44ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பொதுர்தத் தேலை ஜுன் மாதம் 20ஆம் தேதி நடத்துவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்த போதிலும், தற்போது தேர்தலை நடத்தக்கூடிய வகையில் நிலைமைகள் சீராக இல்லையென தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்