இரண்டரை மாத குழந்தையை பிரிந்து வாடும் தாய் - இரண்டு மாதமாக நீளும் 2 மணி நேர பயணம்

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பிறந்து 2 மாதங்களே ஆன குழந்தையை பிரிந்து வாடுகிறார் ஒரு தாய்.

Update: 2020-04-29 12:13 GMT
வீடியோவில் காட்டப்படும் குழந்தையை கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருக்கும் இவர்... ரபியா இப்ராஹின் ராடி. அந்த குழந்தை இரண்டரை மாதங்களுக்கு முன் அவர் பெற்றெடுத்ததுதான்...

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கண்கள் கலங்க வைக்கிறது அவரது கதை...ஈராக் எல்லையோரத்தில் அமைந்துள்ள பாஸ்ரா நகரத்தில் வசிக்கிறார் ரபியா.  பிரசவ காலத்துக்கு முன்னரே  ஈரான் எல்லையோர நகரமான அக்வாஸ் நகரில் பிப்ரவரி 6 ஆம் தேதி  குழந்தையை பெற்றெடுத்தார். 

குறை மாதத்தில் பிறந்ததால் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து பராமரிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். மருத்துவமனையில் தங்கும் செலவுகள் அதிகம் என்பதால், மருத்துவர்கள் அறிவுறுத்தியதன்பேரில் 20 நாட்களில் ரபியா வீடு திரும்பியுள்ளார். 

மருத்துவமனை பராமரிப்பில் இருந்த குழந்தையை நினைத்து ஏங்கி கொண்டிருந்தவருக்கு... அடுத்த இரண்டு வாரங்களில் அழைத்த மருத்துவர்கள் குழந்தையை எடுத்துச் செல்லலாம் என கூறியுள்ளனர். ஆசையோடு மருத்துவமனை புறப்பட்ட ரபியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மார்ச் 8 ஆம் தேதியில் இருந்து எல்லைகள்  மூடப்பட்டதால், ஈரானுக்குள் அனுமதிக்க அதிகாரிகள்  மறுத்துவிட்டனர். 2 மணி நேரத்தில் குழந்தையை எடுத்து உச்சிமுகரும் ஆவலில் சென்ற தாய்... கடந்த 50 நாட்களாக பாசப்போராட்டம் நடத்தி வருகிறார்.
Tags:    

மேலும் செய்திகள்