"ஒரே பாலின திருமணத்திற்கு அனுமதி இல்லை" - ரஷ்ய அதிபர் புதின் திட்டவட்டம்
ஒரே பாலின திருமணம் ஏற்புடையதல்ல என ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.;
ஒரே பாலின திருமணம் ஏற்புடையதல்ல என ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரே பாலின திருமணத்தை ஒருபோதும் சட்ட ரீதியாக அங்கீகரிக்க முடியாது என கூறினார். குழந்தைக்கு தாயும், தந்தையும் இருப்பது தான் யதார்த்தம் எனவும் அதை மாற்றி குழந்தைக்கு பெற்றோர் எண் ஒன்று , பெற்றோர் எண் இரண்டு என சொல்வதா எனவும் புதின் அதிருப்தி தெரிவித்தார்.