பதவி நீக்க தீர்மானம் தோல்வி - அதிபர் டிரம்ப் மகிழ்ச்சி

அமெரிக்க செனட் சபையில் பதவி நீக்க தீர்மானம் தோல்வியடைந்ததற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார்.;

Update: 2020-02-07 07:27 GMT
அமெரிக்க செனட் சபையில் பதவி நீக்க தீர்மானம் தோல்வியடைந்ததற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தமது ஆதரவாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், செய்தித்தாள்களை கைகளில் ஏந்தியபடி, தாம் விடுவிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். பின்னர் தமக்கு எதிராக வாக்களித்த, அதிபர் பதவிக்கு போட்டியிட்ட மிட் ரோம்னி எப்போதும் தோல்வி காண்பவர் என கிண்டலாக கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்