"ஐ.எஸ் அமைப்பை அழித்துக்காட்டுவேன்"- இலங்கை பிரதமர் ராஜபக்சே சவால்

இந்தியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை அழித்துக்காட்டுவேன் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே சவால் விடுத்துள்ளார்.;

Update: 2019-12-14 03:29 GMT
கொழும்பில் உள்ள பாதுகாப்புக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மகிந்த ராஜபக்சே கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த ஆண்டு இரண்டு முறை இலங்கையிலிருந்து படகுமூலம் இந்தியாவிற்குள் நுழைய தீவிரவாதிகள் முயற்சி செய்த போது இந்தியா அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் விபரீதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தார். எனவே ஐ.எஸ் அமைப்பை அழிக்க தாங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தியா மட்டுமல்ல, மியான்மார், தாய்லாந்து, மலேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கும் அச்சுறுத்தல் வர வாய்ப்புள்ளது என்றார்.  பல்வேறு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை நிச்சயம் அழிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளர்.

Tags:    

மேலும் செய்திகள்