அமெரிக்காவில் விபத்து : இந்திய மாணவர் - மாணவி பலி
அமெரிக்காவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் இந்தியாவை சேர்ந்த மாணவர்,மாணவி இருவரும் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர்.;
அமெரிக்காவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் இந்தியாவை சேர்ந்த 26 வயது மாணவர் வைபவ் கோபி செட்டி 23 வயது மாணவி ஜூடி ஸ்டேன்லி ஆகிய இருவரும் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்து, சவுத் நாஷ்வில்லே என்ற இடத்தில் நிகழ்ந்தது. இவர்கள் இருவரும் அமெரிக்காவில் டென்னிசே பல்கலைக்கழகத்தில் உணவு அறிவியல் தொடர்பான பட்டப்படிப்பு படித்து வந்தனர்.