மாலி ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 53 ராணுவ வீரர்கள் பலி
மாலி நாட்டில் ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் அதிரடியாக முற்றுகையிட்டு கொடூரமாக தாக்குதல் நடத்தினர்;
மாலி நாட்டில் ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் அதிரடியாக முற்றுகையிட்டு கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இதில் 53 ராணுவ வீரர்களும் உள்ளூர்வாசி ஒருவரும் பலியாகினர். இங்கு சமீப காலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டின் அமைச்சர் யாயா சங்காரே தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதாகவும், பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.