பல்வேறு தடைகளை தாண்டி பலாலி விமான நிலையம் மீண்டும் இயங்ககம்

இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பலாலி விமான நிலையம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.

Update: 2019-10-18 03:16 GMT
இலங்கையின்  பலாலியில் இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேய விமான படை அமைத்த விமான நிலையம்  பின்னாளில் பயணிகள் போக்குவரத்துக்கு பெரிதும் கைகொடுத்தது . ஏர்-சிலோன் நிறுவனத்தின் முதலாவது பயணம் 1947 டிசம்பர் 10ஆம் தேதி ரத்மலானை விமான நிலையத்தில் இருந்து பலாலி வழியாக சென்னைக்கு துவக்கப்பட்டது.
இலங்கையின் விடுதலைக்கு பின்னர் இங்கிருந்து தென்னிந்தியாவுக்கும் கொழும்புவுக்கும் விமான சேவைகள் தொடங்கப்பட்டன. 1976ஆம் ஆண்டில் விமான படை  பிரிவை இங்கு நிறுவிய இலங்கை அரசு 1982 ஆம் ஆண்டில் உள்நாட்டு போருக்கு பயன்படுத்திக் கொண்டது. 1996 ஆம் ஆண்டில் லயன்-ஏர் தனியார் நிறுவனம் கொழும்புவுக்கு விமான சேவையை தொடங்கியது. அதோடு 1998 மார்ச் மாதம் மொனாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது சேவையை தொடங்கியது. இது ராணுவத்துக்கு பயன்படுத்தப்படுவதாக விடுதலைப் புலிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் செப்டம்பர் 16ம் தேதி சேவை நிறுத்தப்பட்டது. எனினும் 1998 செப்டம்பர் 29ஆம் தேதி இங்கிருந்து ரத்மலானையை நோக்கி புறப்பட்ட லயன்-ஏர் விமானம் மன்னார் பகுதிக்கு வடக்கே கடலில் மூழ்கி 55 பயணிகளுடன் மாயமானதாக கூறப்படுகிறது. 
2002 ஆம் ஆண்டில் போர் நிறுத்தம் ஏற்பட்டதை அடுத்து பயணிகள் சேவைகள் மீண்டும் ஆரம்பமானது. ஜூன் 2002.ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம், கொழும்பு இடையே  எக்ஸ்போ ஏர் சேவை ஆரம்பமானது. 2013 ஜனவரி 4ஆம் தேதி புதிய பயணிகள் முனையம் நிறுவப்பட்டது. இந்நிலையில் 2019 அக்டோபர் 17 முதல் சர்வதேச விமான சேவைகள் துவக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்