அமெரிக்க அதிபர் டிரம்ப் குடும்பத்துடன் பிரிட்டன் பயணம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மூன்று நாள் பயணமாக குடும்பத்துடன் பிரிட்டன் சென்றுள்ளார்.

Update: 2019-06-03 11:39 GMT
இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட படைகள், பிரான்ஸ் நாட்டின் நார்மாண்டி கடற்கரையில் ஜூன் 6ஆம் தேதி காலடி வைத்தன. இந்த தினம் 'டி டே' என்ற பெயரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதன் 75ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்க அதிபர் டிரம்ப் குடும்பத்துடன் மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். லண்டன் ஸ்டான்ஸ்டட் விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, பக்கிங்காம் அரண்மனையில் ராணி எலிசபெத் அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் அவர், இளவரசர் சார்லஸ் மற்றும் அரச குடும்பத்தினரை சந்தித்து பேசுகிறார். பயணத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், விரைவில் ராஜினாமா செய்ய இருக்கும் பிரிட்டன் பிரதமர் தெரசா மற்றும் அந்நாட்டு அரசியல் தலைவர்களையும் சந்திக்கிறார். அதன்பிறகு, அயர்லாந்துக்கு டிரம்ப் செல்கிறார். 
Tags:    

மேலும் செய்திகள்