"முன்னெச்சரிக்கை தகவல் பிரதமருக்கு ஏன் தெரிவிக்கப்படவில்லை" - இலங்கை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பேச்சு

இலங்கை குண்டு வெடிப்பு குறித்து முன்கூட்டியே கிடைத்த தகவல் பிரதமருக்கு தெரிவிக்கப்படாதது குறித்து,இலங்கை அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2019-04-25 10:43 GMT
குண்டு வெடிப்பு குறித்து முன்கூட்டியே புலனாய்வு பிரிவுக்கு தகவல்கள் கிடைத்ததாக கூறப்படும் நிலையில், இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா தனக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய லக்‌ஷ்மன் கிரியெல்லா, தகவல் கிடைத்தும், தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்காதது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று தெரிவித்தார். தொடர்ந்து, பிரதமருக்கு தகவல் தெரிவிக்காத புலனாய்வு பிரிவை இயக்குவது யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் கடுமையாக விவாதிக்கப்பட்டது.  
Tags:    

மேலும் செய்திகள்