கொழும்புவில் மயான அமைதி : முக்கிய இடங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

இலங்கையில் குண்டு வெடிப்பு நடந்து நான்கு நாட்கள் கடந்த நிலையில், உச்சகட்ட பாதுகாப்பு காரணமாக அந்நாட்டின் தலைநகர் கொழும்பு மயான அமைதியாக காட்சி அளிக்கிறது.

Update: 2019-04-25 09:02 GMT
குண்டு வெடிப்பு நிகழ்ந்த, கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய ஆலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடங்கள், குண்டு எடுக்கப்பட்ட இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் மிகவும் பரபரப்பாகவும், பதற்றத்துடனும் இருந்து வந்த தலைநகர் கொழும்பு தற்போது ஆள்நடமாட்டம் இன்றி, அமைதியாக இருக்கிறது. அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் வேலைமுடியும் நேரத்திற்கு முன்னரே வீடு திரும்பி வருகின்றனர். போர்க்காலத்தில் இருந்தது போன்று கொழும்பு நகரின் முக்கிய இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து, கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அவசர சட்டம், உச்சகட்ட பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தலைநகர் கொழும்பு மயான அமைதியாக காட்சி அளிக்கிறது. 
Tags:    

மேலும் செய்திகள்