மெக்சிகோ கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு - 14 பேர் பலி
மெக்சிகோவில் இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர்.;
மெக்சிகோவில் இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். சலமான்கா பகுதியில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் நேற்று துப்பாக்கிகளுடன் புகுந்த கும்பல், அங்கிருந்தவர்களை நோக்கி, சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியது. இதில் 14 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.