"இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கை இல்லை" - அதிபர் சிறிசேன

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு, பிரதமர் நியமனம் உள்ளிட்ட நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு எதிரானது இல்லை என அதிபர் சிறிசேன தெளிவுப்படுத்தியுள்ளார்.

Update: 2018-11-27 08:10 GMT
இலங்கை அதிபர் மாளிகையில், வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊழல் குற்றச்சாட்டு மற்றும் தொலைநோக்கற்ற தன்னிச்சையான நடவடிக்கையால் பிரதமர் ரனிலை மாற்றும் நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக விளக்கம் அளித்தார். முன்னாள் பிரமதர் ரனில் விக்கிரமசிங்கே மீதான வங்கி மோசடி, ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஆணையம் அமைத்து விசாரிக்க உள்ளதாகவும் அதிபர் சிறிசேன கூறினார். நாடாளுமன்றம் கலைப்பு, பிரதமர் நியமனம் உள்ளிட்ட முடிவுகள் சட்டத்திற்கு உட்பட்டே எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்