"ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை பிரதமர் ஆசனம் கிடையாது" - சபாநாயகர் கரு ஜெயசூர்யா

இலங்கையில் புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் ராஜபக்சே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்கு பிரதமர் ஆசனம் வழங்கப்பட மாட்டாது என நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.;

Update: 2018-11-05 09:19 GMT
இலங்கையில் புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் ராஜபக்சே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்கு பிரதமர் ஆசனம் வழங்கப்பட மாட்டாது என நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.  அதிபர் சிறிசேன தனக்கு வழங்கிய வாக்குறுதிக்கு விரோதமாக செயல்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தை நவம்பர் 5 அல்லது 7 ஆம் தேதி கூட்டுவதாக அளித்த வாக்குறுதியை அதிபர் மீறியுள்ளதாக கூறிய கரு ஜெயசூரியா,  சிறிசேனவின் இத்தகைய செயல்பாடு அரசியலமைப்புக்கு முரணானது, ஜனநாயகத்திற்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்