ரஷ்யா உடனான உறவை மேம்படுத்த டிரம்ப் முயற்சி - புதின்

"எங்களை நோக்கி ஏவுகணை வந்தால், அணு ஆயுதத்தால் பதிலடி"

Update: 2018-10-19 01:09 GMT
ரஷ்யா உடனான பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்க அதிபர் டிரம்ப் முனைப்பு காட்டுவதாக விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அந்நாட்டு அதிபர் புதின், உள்நாட்டு அரசியல் குழப்பங்களையும் மீறி, ரஷ்யா உடனான உறவை மேம்படுத்த டிரம்ப் விரும்புவதாக கூறினார். ரஷ்யா மீது தாக்குதல் நடத்த ஏவுகணை ஏவப்பட்டால் மட்டுமே, அணு ஆயுதம் மூலம் பதிலடி கொடுப்போம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்