பாகிஸ்தானில் இன்று அதிபர் தேர்தல்
பதிவு: செப்டம்பர் 04, 2018, 11:38 AM
இன்று காலை தேர்தல் தொடங்குகிறது. அதிபர் பதவிக்கு மூன்று பேர் போட்டியிடுகின்றனர். ஆளும் கட்சி சார்பில் இம்ரான் கானின் நெருங்கிய நண்பரும், பல் மருத்துவருமான ஆரிஃப் ஆல்வி போட்டியிடுகிறார். 

எதிர்க்கட்சிகள் சார்பில், சவுத்ரி இஜாஸ் ஆசான், மவுலானா பசல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு இல்லாததால், ஆளும் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஆரிஃப் ஆல்வியின் வெற்றி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக பாகிஸ்தான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.