யூடியூப் பிரபலத்தை ஊமைக்குத்தாக குத்தி கிட்னாப் செய்த இன்னொரு யூடியூப் பிரபலம்

Update: 2023-08-10 05:30 GMT

தர்மபுரியில் யூடியூப் சேனல் நடத்துவதில் ஏற்பட்ட தொழில் போட்டியால் ஒருவர் காரில் கடத்தி செல்லப்பட்ட நிலையில், 12 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரி நகர் பகுதியில் கார்த்திக் என்கிற சின்னச்சாமி தனது நண்பர்களுடன் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதே போல், ஆனந்த் என்பவரும் அதே பகுதியில் யூடியூப் சேனல் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக, அப்டேட் வெளியிடுவதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சின்னச்சாமி, தனது நண்பர்களுடன், ஆனந்த் அலுவலகத்துக்கு சென்று, அவரை கடுமையாக தாக்கி காரில் கடத்தி சென்றனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, தர்மபுரி அடுத்த குண்டல்பட்டியில் ஆனந்தை காருடன் மீட்டனர். பின்னர், 12 பேரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்து 70 ஸ்மார்ட்போன்கள், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன

Tags:    

மேலும் செய்திகள்