வெயிலின் கோர முகம்.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த ஷாக்

Update: 2024-05-01 12:49 GMT

வருகிற 5ஆம் தேதி வரை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4° டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 108.5 ஃபாரன்ஹீட்டும், ஈரோட்டில் 107.9 ஃபாரன்ஹீட்டும், திருப்பத்தூரில் 107.2 ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்