"நம்மகிட்ட எல்லா திட்டமும் இருக்கு.." - ரூ.80 கோடியை சுருட்டிய குடும்பம்

Update: 2023-08-03 07:47 GMT

மதுராந்தகத்தில் ஏலச்சீட்டு, நகை தவணை சீட்டு நடத்தி ரூ.80 கோடி மோசடி செய்ததாக பொதுமக்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பஜார் வீதியில் ஜனார்த்தனன்‌ மற்றும் அவரது மனைவி சற்குணாம்மாள், அவரது மகன் யுகேந்தர் ஆகியோர் ஜே எஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்தனர். இவர்கள் தங்க நகை சேமிப்பு திட்டம், அமுத சுரபி சேமிப்பு திட்டம், கல்வி சேமிப்பு திட்டம் எனக்கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடமிருந்து சுமார் 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜனார்த்தனன், யுகேந்தர் ஆகியோர் திடீரென தலைமறைவாகினர்.

மேலும், சற்குணாம்மாள் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளதால் அவர் அதே வீட்டில் வசித்து வருகிறார். அவரிடம் பணத்தை கொடுத்த பொதுமக்கள் கேட்டபோது தனக்கு எந்த சம்மந்தமும் இல்லை என கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்