"புகாரளிக்கும் மக்கள் மீது நள்ளிரவில் மறைமுகமாக தாக்குதல்" - போலீசார் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

Update: 2024-04-28 02:41 GMT

வட சென்னையில், 17 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மூலம் கொலைக் குற்றங்கள் தொடர்ந்து அரங்கேற்றப்படுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கஞ்சா மற்றும் போதைப்பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாக்கப்பட்டு, அதன் மூலம் இந்த குற்றச்சம்பவங்கள் அரங்கேற்றப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசில் புகாரளித்தால், புகாரளிக்கும் மக்கள் மீது மர்மநபர்கள் இரவில் தாக்குதல் தொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், பொதுமக்கள் ஆன்லைன் மூலம் புகாரளிப்பதாகவும், அதிலும் திடுக்கிடும் திருப்பமாக.. புகார் கொடுத்தவர்களின் முகவரிகளை நுண்ணறிவு போலீசாரே குற்றவாளிகளிடம் பகிர்ந்து புகார்தாரர்களை அடையாளம் காட்டி கொடுப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், கடந்த 4 மாதங்களில் மட்டும் வடசென்னையில் 10 கொலைகள் நடந்திருப்பதாகவும், இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரு கொலைகள் எனக் கூறி பதறும் பொதுமக்கள், நுண்ணறிவு போலீசாரின் அலட்சியப்போக்கே இதற்கு காரணம் என குற்றம் சுமத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்