குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய வட்டாட்சியரின் ஓட்டுனர்..2 உயிர்கள் துடிதுடித்து பலி

Update: 2024-05-27 03:19 GMT

திருச்சி அருகே வட்டாட்சியர் வாகனம் மோதி இருவர் உயிரிழந்த நிலையில் குடிபோதையில் இருந்த ஓட்டுனரை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

திருச்சி மணிகண்டம் யூனியன் அலுவலகம்

எதிரே வட்டாட்சியரின் வாகனத்தை

அதன் ஓட்டுனர் புஷ்பராஜ் ஒட்டி சென்றுள்ளார். வாகனத்தில் வட்டாட்சியர் இல்லாத நிலையில் குடிபோதையில்

புஷ்பராஜ் வாகனத்தை ஓட்டி சென்றதால்

கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த 2

இருசக்கர வாகனங்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த

பெயிண்டர் தனபால் என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் பூசாரி மணி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை

பலனின்றியும் உயிரிழந்தனர். வட்டாட்சியர் வாகன ஓட்டுனர் புஷ்பராஜ் குடிபோதையில்

இருந்ததால் பொதுமக்கள் பிடித்து

போலீசில் ஒப்படைத்தனர். இந்த விபத்து

குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்