கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் மேகக்கூட்டங்கள் அழகை கண்டு ரசித்த மக்கள்

Update: 2024-01-01 02:08 GMT

கொடைக்கானலில், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு குவிந்த‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். குறிப்பாக பைன் மர காடுகள், பில்லர் ராக், குணா குகை, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தும் உற்சாகம் அடைந்து வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்