இன்றுடன் கடைசி நாள்.. நீங்க பண்ணிட்டீங்களா..? | ITR Filling | Last date
2022 - 23 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்று கடைசிநாள் ஆகும். இதுவரை 6 கோடிக்கும் அதிகமானோர் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ள வருமான வரித்துறை, நேற்று ஒரே நாளில் மலை 6.30 மணி வரை 26 லட்சத்து 76 ஆயிரம் பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ததாக குறிப்பிட்டுள்ளது. மேலும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள், வரி செலுத்துவோருக்கான உதவி மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.