அக்னி வெயில் vs கனமழை... குடையோட ரெடியா இருங்க மக்களே..! கொளுத்தும் கோடையில் `ஜில்லோ' நியூஸ்...

Update: 2024-05-10 11:10 GMT

தமிழகம், புதுச்சேரியில் வருகிற 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு கேரளா அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வருகிற 14ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அதேசமயம், அடுத்த 5 தினங்கள் தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் ஒருசில இடங்களில் 2-3செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்