பிரபல ஹோட்டலில் அள்ள அள்ள கெட்டுப்போன சிக்கன்,மட்டன்,பிரட் அல்வா

Update: 2024-05-16 05:36 GMT

பிரபல ஹோட்டலில் அள்ள அள்ள கெட்டுப்போன சிக்கன்,மட்டன்,பிரட் அல்வா - மொத்தமாக ஃபுல்ஸ்டாப் வைத்த அதிகாரிகள்

தூத்துக்குடியில் பிரபல பிரியாணி கடையில் சுமார் 38 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லிவிங்ஸ்டா என்பவர் எட்டையபுரம் சாலையில் அனிஃபா என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென உணவகத்தில் ஆய்வு நடத்திய போது, நேற்று முன்தினம் சமைத்து ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த சிக்கன், மட்டன், மீன் வகைகள், பிரட் அல்வா, நூடுல்ஸ் உள்ளிட்டவையை பறிமுதல் செய்தனர். மேலும் முறையான உரிமம் பெறாமல் உணவகம் நடத்தியது தெரிய வந்தததை அடுத்து, உரிமைத்தை ரத்து செய்த அதிகாரிகள், கடையை மூட உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்