44 ஆயிரம் கொடுத்தால் 10 லட்சம்..! கைவரிசை காட்டிய பெண் வழக்கறிஞர்.. தட்டித்தூக்கிய போலீஸ்..

Update: 2024-05-23 02:21 GMT

44 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் பத்து லட்சம் தருவதாக கூறி ஜெராக்ஸ் நோட்டை கொடுத்து ஏமாற்றிய பெண் வழக்கறிஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி நீதி மன்றத்தில் அலுவலக உதவியாளராக

வேலை பார்த்து வருபவர் விக்னேஷ். இவர் அருகில் உள்ள வங்கி ஏடிஎமில் 38 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்திய போது, பணம் அனைத்தும் வெளியே வந்துள்ளது. இது தொடர்பாக வங்கி மேலாளரை விக்னேஷ் தொடர்பு கொண்ட நிலையில், பணம் அனைத்தும் கள்ள நோட்டு என கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். இந்த விவகாரத்தில், பெரியகுளத்தை சேர்ந்த ஜீவஜோதி என்ற பெண் வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். விக்னேஷின் பணத்தேவையை அறிந்து கொண்ட ஜீவஜோதி, ஒரு பெட்டியில் 44 ஆயிரம் ரூபாய் போட்டால் 10 லட்ச ரூபாயாக திரும்ப வரும் எனக் கூறி, இறுதியாக ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக கலர் ஜெராக்ஸ் நோட்டுகளை கொடுத்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது. ஜீவஜோதி கொடுத்த ஜெராக்ஸ் நோட்டை விக்னேஷ் ஏடிஎம்மில் செலுத்தியதால் பணம் வெளியே வந்தது தெரியவர, கைதான ஜீவஜோதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்