மாணவி கொடுத்த புகார்... ஆட்சியர் வைத்த சீல்... மதுரைக் கிளை அதிரடி உத்தரவு

Update: 2024-03-12 04:39 GMT

தென்காசியைச் சேர்ந்த பவித்ரா என்பவர் தாக்கல் செய்த மனுவில், தனது கணவர் டிப்ளமோ நர்சிங் கல்லூரி நடத்தி வருவதாகவும், மாணவி ஒருவர் கொடுத்த பொய்யான புகாரில் கணவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதால் கல்லூரி மூடி சீல் வைக்கப்பட்டதாக கூறியுள்ளார்.. சீல் வைப்பதற்கு முன்பாக ஆய்வு செய்யவோ அல்லது விளக்கம் கேட்டோ எந்த நோட்டீஸும் அனுப்பவில்லை என மனுவில் பவித்ரா தெரிவித்துள்ளார்... இந்த மனு விசாரணைக்கு வந்த போது, தேர்வு நெருங்கி வரும் சூழலில் முன்னறிவிப்பில்லாமல் சீல் வைக்கப்பட்டதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதைக்

கருத்தில் கொண்டு சீலை அகற்ற வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது... இதனை பதிவு செய்த நீதிபதி சுவாமிநாதன், இந்த வழக்கில் தென்காசி மாவட்ட ஆட்சியர் தரப்பில் கல்லூரிக்கு சீல் வைப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும், கல்லூரிக்கு வைக்கப்பட்ட சீலை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்...

Tags:    

மேலும் செய்திகள்