தமிழ்நாட்டில் இருந்து மிஸ் யூனிவர்ஸ் போட்டிக்கு தேர்வானது மகிழ்ச்சியை தருவதாக கோவையை சேர்ந்த இளம்பெண் புவனேஷ்வரி உற்சாகமடைந்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அழகு போட்டியில் பங்கேற்ற புவனேஷ்வரி, WILD CARD ROUND மூலம் மிஸ் யூனிவர்ஸ் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். ஈஷாவில் சிவனை வழிபட்ட அவர், மிஸ் யூனிவர்ஸ் போட்டிக்கு தேர்வானது மகிழ்ச்சியான தருணம் எனவும், ஆன்மீக சிந்தனை தேசிய அளவில் கொண்டு செல்வேன் என குறிப்பிட்டார்.