விசாகப்பட்டினதிற்கு வந்த உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் "தி வேர்ல்ட்"

Update: 2024-04-29 13:24 GMT

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலான "தி வேர்ல்ட்" விசாகப்பட்டினத்தை வந்தடைந்துள்ளது.

vovt

தனியாருக்குச் சொந்தமான உலகின் மிகப்பெரிய கப்பலான "தி வேர்ல்ட்" கப்பல் நேற்று மாலை விசாகப்பட்டினத்திற்கு வந்தடைந்தது. துறைமுக நகரமான விசாகப்பட்டினத்திற்கு இந்த கப்பல் வந்தது இது முதல்முறையாகும். இரண்டு நாட்கள் விசாகப்பட்டினத்தில் தங்கியிருக்கும் என்று மாலுமிகள் தெரிவித்தனர். இந்தியாவைத்தொடர்ந்து, சொர்க்கத்தை பிரதிபலிக்கும் இந்த மிக ஆடம்பரமான கப்பல், அண்டார்டிகா உட்பட ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா மற்றும் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்குச் செல்லும். 2024-ம் ஆண்டு, உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 சுற்றுலாப் பயணிகள் இந்த தனியார் கப்பலில் பயணிக்கின்றனர். தற்போது இவர்கள் அனைவரும் விசாகப்பட்டினத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்